08 ஜனவரி 2011

பெற்றோரை சந்திக்க சீனாவில் சட்டம்

வயதானவர்களின் பராமரிப்பில் சிக்கல்


வயதான தமது பெற்றோரை போய் சந்திப்பதை கட்டாய கடமையாக்கும் வகையில் சட்டம் ஒன்றை கொண்டு வர சீனா உத்தேசித்து வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

சீனாவில் வயதானவர்களின் எண்ணிக்கை பெருகி வரும் நிலையில் அதனால் ஏற்படும் பிரச்சனைகளை கையாள அரசு முனைந்து வருகிறது.

தமது பிள்ளைகளால் புறக்கணிக்கப்படும் வயாதான பெற்றோர்கள் தம்மை உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் பேண வேண்டும் என்று நீதிமன்றத்தில் போய் உரிமை கோரும் வகையில் சட்ட திருத்தம் செய்ய உத்தேசிக்கப்பட்டுள்ளதாக சீன அதிகாரி ஒருவர் அரசாங்க ஊடகத்திடம் தெரிவித்துள்ளார்.


வயதான பெற்றோர்களை பராமரிப்பது என்பது சீன கலாச்சாரத்தின் ஒரு அங்கமாக இருந்தாலும் சமீப காலங்களில் ஏற்பட்ட பெரிய அளவிலான இடப்பெயர்வு மற்றும் வேலை நிமித்தமான அழுத்தங்கள் காரணமாக சீனாவில் குடும்ப உறவுகளுக்கு இடையேயான நெருக்கம் குறைந்து வருகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக