03 நவம்பர் 2010

உடலுக்கு சக்தி தரும் வாழைப்பழங்கள்


நவ.3:தினசரி மாலை நேரம் ஒரு மஞ்சள் வாழைப்பழம் சாப்பிடும் பழக்கம் உள்ளவர்களுக்கு தூக்கம் இயல்பாக வருகின்றதாம்.

தூக்க மாத்திரைக்குப் பழக்கமானவர்கள் அதற்குப் பதிலாக வாழைப் பழத்திற்கு அடிமையாகலாம். அதனால் பின் விளைவு வராது. மூளையைச் சுறுசுறுப்பாகவும், அதிகமான தூக்கமிருந்தால் அதனைக் கட்டுப்படுத்தவும் உறுதுணையாகும் செரடோனின் எனும் `நியூரோ டிரேன் ஸ்மிட்டர்’ வாழைப் பழத்தில் உள்ளதாம்.

இங்கிலாந்தில் உள்ள ஹூஸ்டன் பல்கலைக் கழகத்தில் வாழைப் பழத்தை ஆராய்ச்சி செய்து அதில் இரண்டு வேதிப் பொருட்களைக் கண்டறிந்தனர். அதனைச் சோதித்தபோது `குடற் புண்ணை’ ஆற்றும் திறன் அவற்றுக்கு இருப்பது உறுதியானது

குறிப்பு:கடுமையான ஆஸ்துமா உள்ளவர்கள், நீண்ட கால சர்க்கரை நோய் உள்ளவர்கள், கை, கால் வலிப்பு உள்ளவர்கள், உடல் பருமன் மிக்கவர்கள் வாழைப் பழத்தைத் தவிர்ப்பது நல்லது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக