02 நவம்பர் 2010

அருந்ததி ராய் சட்ட நிபந்தனைக்கு உட்பட்டு பேசியதால் தவறில்லை - நடவடிக்கையும் இல்லை -ப.சிதம்பரம்

டெல்லி,நவ.2:டெல்லியில் நேற்று செய்தியாளர்களை மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் சந்தித்தபோது அருந்ததி ராய் குறித்து கேட்கப்பட்டது.

அதற்குப் பதிலளித்த ப.சிதம்பரம், நடவடிக்கை எடுக்காமல் இருப்பதும் கூட ஒரு நடவடிக்கைதான். ஐபிசி 124ஏ பிரிவில் என்ன கூறப்பட்டுள்ளது என்றால், நேரடியாக ஒரு வன்முறையைத் தூண்டும் வகையில் பேசாத வரை, அவர்கள் மீது சகிப்புத் தன்மையைக் காட்டி நடவடிக்கை எடுக்காமல் இருக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.

அருந்ததி ராய் பேச்சு இந்த நிபந்தனைக்கு உட்பட்டு இருப்பதால் சட்டத்தில் கூறியுள்ளபடி அவர் மீது டெல்லி போலீஸார் நடவடிக்கை எதையும் எடுக்கவில்லை என்றார் ப.சிதம்பரம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக