பாரி்ஸ்,நவ.19:ஆப்கானில் நிறுத்தப்பட்டுள்ள அந்நிய நாட்டு படையினருக்கு அந்த நாடு படுகுழியாகும் என பிரான்சு பாதுகாப்புத்துறை அமைச்சர் அலைன் ஜுப்பி தெரிவித்துள்ளார்.
ஆப்கானில் அடுத்த ஆண்டு பிரான்சு நாட்டு ராணுவம் வாபஸ் பெறப்படும் என அவர் தெரிவித்தார்.
போர்சுகல் தலைநகரான லிஸ்பனில் இன்று துவங்கவிருக்கும் உச்சிமாநாட்டில் இதுக்குறித்து விவாதிக்கப்படும் என முன்னாள் பிரான்சு பிரதமராக பதவி வகித்த ஜுப்பி கூறினார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமைதான் ஜுப்பி பிரான்சு நாட்டின் பாதுகாப்பு அமைச்சராக பதவியேற்றார். ஆப்கான் அரசுக்கு சொந்தமாக பிரச்சனைகளை கையாளும் திறமை வரும்வரை தங்களுடைய ராணுவத்தை பூரணமாக வாபஸ் பெறமாட்டோம் எனவும் அவர் தெரிவித்தார்.
அதேவேளையில், அடுத்த ஆண்டு முதல் பகுதிக்கு முன்பே ராணுவத்தை வாபஸ்பெறத் துவங்குவோம் என ஆப்கானின் மூத்த நேட்டோ அதிகாரி மார்க் நெட்வில் தெரிவித்துள்ளார்.
2014 ஆம் ஆண்டில் பெரும்பாலான ஆப்கான் பகுதிகள் ஆப்கான் ராணுவத்தினரின் கட்டுப்பாட்டின் கீழ் வரும் என அவர் தெளிவுப்படுத்தினார்.
அமெரிக்கா தலைமையிலான அந்நிய ராணுவத்தினரிடமிருந்து ஆப்கானின் அனைத்துப் பொறுப்பையும் 2014 ஆம ஆண்டு ஆப்கான் ராணுவத்தினர் ஏற்றுக்கொள்வார்கள் என அந்நாட்டு அதிபர் ஹமீத் கர்ஸாயி ஏற்கனவே அறிவித்துள்ளார்.
அடுத்த ஆண்டு ஜூலை மாதம் ராணுவத்தை வாபஸ் பெறுவது துவங்கும் என அமெரிக்கா அறிவித்துள்ளது. இவ்விவகாரம் லிஸ்பன் உச்சிமாநாட்டில் விவாதிக்கப்படும்.
3500 பிரான்சு படையினர் ஆப்கானில் உள்ளனர். 50 பிரான்சு நாட்டு ராணுவத்தினர் உயிரை இழந்துள்ளனர்.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக