செவ்வாய்க்கிழமை, அக்டோபர் 12, 2010,

சென்னை: இனி மின்சாரக் கட்டணம் செலுத்த மைல் நீள க்யூவில் காத்திருக்க வேண்டிய அவசியமில்லை.
ஆன்லைனிலேயே மின்கட்டணம் செலுத்துவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் தமிழ்நாடு மின்சார வாரியமும் கனரா வங்கியும் கொயெழுத்திட்டுள்ளன.
இதன்படி கனரா வங்கியின் வாடிக்கையாளர்கள் தங்களது மின் கட்டணத்தை அக்டோபர் மாதம் முதல் டெபிட் கார்டு அல்லது ஏடிஎம் கார்டு உதவியுடன் ஆன்லைனில் செலுத்தலாம். முதல்கட்டமாக சென்னை, கோயம்புத்தூர், திருப்பூர் மாவட்ட மின் நுகர்வோர் இந்த வசதியைப் பெறமுடியும்.
ஆன்லைனில் மாதம் 70 ஆயிரம் பேர் கட்டணத்தைச் செலுத்தும் நிலை உள்ளதால், விரைவில் இந்த வசதி மேலும் பல வங்கிகளுடன் ஒப்பந்தம் செய்வதுடன் மற்ற நகரங்களுக்கும் விரிவுபடுத்தப்படும் என்று மின்வாரியம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக