வாஷிங்டன்,அக்.5: 9/௦௦11 தாக்குதலுக்கு உள்ளான உலக வர்த்தக மையம் நிலைக்கொண்ட க்ரவுண்ட் ஜீரோவுக்கு அருகில் மஸ்ஜித் நிர்மாணிப்பதற்கான நடவடிக்கையை மேற்கொண்டுள்ள இமாம் ஃபைசல் அப்துல் ரெளஃப், அவருடைய மனைவி டெய்சிகான் ரெளஃப் ஆகியோருக்கு அன்றாடம் தொலைபேசிகளிலும் இணையதளம் வழியாகவும் கொலை மிரட்டல்கள் குவிந்துகொண்டேயிருக்கின்றன.
தாக்குதலுக்குள்ளான கட்டடங்களுக்கு அருகிலேயே இஸ்லாமிய மையத்தையும் மசூதியையும் கட்ட ஏற்பாட்டாளர்கள் சிந்தித்து வருகின்றனர். ஆனால் எதிர்ப்பாளர்களோ மசூதியே கூடாது என்பதில் உறுதியாக இருக்கின்றனர்.
எதிர்காலத்தில் மிகப்பெரிய சுற்றுலா மையமாக விளங்கும் வகையில் பெரிய கட்டடம் கட்ட திட்டமிடப்பட்டிருக்கிறது.
பல அடுக்கு மாடி கட்டடமாக உருவெடுக்கவுள்ள இதன் ஒரு தளத்தில் இஸ்லாமிய மையமும் மற்றொன்றில் தொழுகை செய்யும் வசதிகளோடு மிகப்பெரிய மசூதியும் கட்டப்படும் என்று கான் தெரிவிக்கிறார்.
இந்த கட்டடத்தில் உடல் பயிற்சி மையம், நீச்சல் குளம், குழந்தைகளைப் பராமரிக்கும் பிரிவு, சமையல் பள்ளி, கலை அரங்கம் ஆகியவையும் கட்டப்படவுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக