31 ஆகஸ்ட் 2010

உடல் நலத்திற்கு உகந்த பப்பாளி இலை கஷாயம்

கடுமையான காய்ச்சலைக் குணப்படுத்த உதவும் பப்பாளி இலை கஷாயம் இதய நோயாளிகளுக்கும் நல்லது.

முக்கியமாக அடிக்கடி இதயத் துடிப்பு அதிகரிப்பதால் அவதிப்படும் நோயாளிகளுக்கு பப்பாளி இலை கஷாயம் சிறந்த பலனளிக்கும்.

பப்பாளி இலை கஷாயம் நோயாளியை அமைதிப்படுத்தி, இதயத்துடிப்பைக் குறைத்து நிவாரணம் அளிக்கிறது. இதய நோயாளிகளுக்கு நன்றாக முற்றி பழுத்த பப்பாளிப் பழம் மிகச் சிறந்த உணவாகும்.

பப்பாளிப் பழம் ரத்தத்தில் கொலஸ்டிராலின் அளவைக் குறைத்து, ரத்தக் குழாய்களை நெகிழக் கூடியவையாக ஆக்குவதால், இதய நோயாளிகள் பப்பாளிப் பழத்தைத் தவறாமல் கண்டிப்பாக அவர்களுடைய உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது.

காலை உணவாக பப்பாளிப் பழத்தை மட்டுமே சாப்பிடலாம். மாலையில் தேநீர் வேளையிலும் பப்பாளிப் பழம் சாப்பிடலாம். ஆனால் இரவில் பப்பாளிப் பழம் சாப்பிடக் கூடாது.

தயாரிப்பது எப்படி?
நிழலில் உலர்த்தப்பட்ட பப்பாளி இலையில் சுமார் 5 கிராம் முதல் 10 கிராம் வரை எடுத்துக் கொள்ளவும். அதை ஒரு கோப்பை வெந்நீரில் போட்டு 5 நிமிடங்களுக்கு நன்றாக ஊற விடவும். பின்னர் வடிகட்டி அந்த கஷாயத்தை நோயாளிகளுக்குக் குடிக்க கொடுக்கவும்.

இந்த சிகிச்சையினால் நோயாளியின் உடல் வெப்ப நிலை தணியும். நாடித் துடிப்பின் வேகமும் குறையும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக